காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

Spread the love

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு சுமார் 60 லட்சம் ரூபாயை இழந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட 30 லட்சம் ரூபாய் கடனை அடைக்க குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டனர். இதற்காக ரியல் எஸ்டேட் வியாபாரி விஸ்வநாதம் என்பவரிடம் ஒரு நிலத்தை அடமானம் வைத்து 12 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தனர். கடனைத் திருப்பிக் கேட்கவே, அவரைத் தீர்த்துக்கட்ட தம்பதியினர் முடிவு செய்தனர்.

கடந்த சனிக்கிழமை, வேறொரு நிலத்தைக் காட்டுவதாகக் கூறி விஸ்வநாதத்தை காரில் அழைத்துச் சென்ற தம்பதியினர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அவரது கழுத்தை கம்பியால் இறுக்கிக் கொலை செய்தனர். பின்னர் அவர் அணிந்திருந்த 14 சவரன் தங்க நகைகளைப் பறித்துக்கொண்டு, உடலை ஒரு கால்வாயில் வீசிவிட்டு ஐதராபாத் சென்று நகைகளை விற்றுள்ளனர். காணாமல் போன கணவரைத் தேடி விஸ்வநாதத்தின் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்ததில், காவலர் பிரவீன் மற்றும் அவரது மனைவி சிக்கினர். விசாரணையில் அவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். மேலும், இவர்கள் கடந்த மாதம் ஒரு மூதாட்டியிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி நகை திருடியதும் தெரியவந்தது. தற்போது இந்தக் காவலர் தம்பதியினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Swetha

Recent Posts

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

1 மணத்தியாலம் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

1 மணத்தியாலம் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

2 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

2 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

2 மணத்தியாலங்கள் ago

“அம்மாவிடம் சொன்னால் கொலை செய்திடுவேன்!”… 30 ஆண்டுகளாக சொந்த மகளையே சித்திரவதை செய்த தந்தை… ஒரு திருடனால் அம்பலமான தந்தையின் கோர முகம்…!!!

தற்போது 49 வயதாகும் லிஸி ஜோன்ஸ் என்பவர், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை டேவிட் டெரன்ஸ் பெத்திக்…

2 மணத்தியாலங்கள் ago