தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விட வேண்டும் என்ற நிலைப்பாடோடு மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். மறுபக்கம் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இப்படி மாறி மாறி கட்சியினர் தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபட்டு வர முக்கிய பிரபலங்களும் கட்சியில் இணைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுக உறுப்பினர் சேர்க்கையில் மாற்று கட்சியினர் பலரும் திமுகவில் இணைந்து வரும் நிலையில் கட்சியினர் விறுவிறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக செந்தில் பாலாஜியை அதிமுக மற்றும் பாஜகவின் முக்கிய தொகுதிகளில் களம் இறங்கி நிர்வாகிகளை திமுகவில் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார். அதன்படி அதிமுக, தேமுதிக, பாமக, TVK உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு திமுகவில் இணைந்துள்ளனர்.
கரூர் மாவட்ட அவைத்தலைவர் முருகன் சுப்பையா, மாவட்ட மாணவரணி செயலாளர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் உள்ளிட்ட 21 தேமுதிகவினர், அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், தமிழகம் வெற்றி கழகம் கட்சியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர், பாமகவை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…