கரூர் பகுதியில் வட்டிக்கு பணம் வழங்கும் நபர்களின் கடுமையான தொல்லை மற்றும் மிரட்டலால் மனமுடைந்த இளம் பெண் ஒருவர் விபரீதமான முடிவெடுத்து உயிரிழந்தார். குடும்பத் தேவைக்காக வாங்கிய சிறிய கடனுக்கும், செலுத்திய தொகைக்கு மேலும் பல மடங்கு வட்டி கேட்டு கந்துவட்டிக்காரர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர்.
கடன் வாங்கிய குடும்பத்தினரை பொது இடங்களிலும், வீட்டின் அருகிலும் சென்று தகாத வார்த்தைகளால் அவதூறாகப் பேசியதோடு, தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த தொடர் அவமானமும் மன உளைச்சலுமே அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ளக் முக்கியக் காரணம் என்று உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனைக் கண்டித்து பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு, கந்துவட்டி கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
