“நிர்வாணமாக நின்ற மனைவி…” ரோபோ வேக்கம் கிளீனரால் அம்பலமான கள்ளக்காதல்… மனைவியின் அந்தரங்கத்தை படம் பிடித்த கணவர்…! நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு…!!

By Devi Ramu on புரட்டாதி 2, 2026

Spread the love

தைவானைச் சேர்ந்த நபர் ஒருவருக்குத் தனது மனைவி வேறொரு ஆணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் உள்ள ‘ரோபோ வேக்கம் கிளீனர்’ சாதனத்தில் இருந்த கேமராவை மொபைல் செயலி மூலம் இயக்கி நோட்டமிட்டுள்ளார். அப்போது தனது மனைவி மற்றொரு நபருடன் நிர்வாணமாக இருந்ததை ரகசியமாக வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த ஆதாரத்தை வைத்துச் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கணவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்து, மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் இணைந்து NT$500,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.14.99 லட்சம்) இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், தனது அனுமதியின்றி அந்தரங்கத்தைப் படம் பிடித்ததாக மனைவி அளித்த குற்றவியல் புகாரில் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. கணவன்-மனைவியாக இருந்தாலும் ஒருவரின் தனியுரிமையை மீற அனுமதி இல்லை எனக் கூறி, ரகசியமாக வீடியோ பதிவு செய்த கணவருக்கு 5 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்காதலை நிரூபித்து இழப்பீடு பெற்ற கணவர், அதே ஆதாரத்தைப் பதிவு செய்த விதத்தால் சிறை தண்டனை பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.