“உன் கணவனால் அது கிடைக்காது, என்னுடன் வா”.. சில்மிஷம் செய்த சின்ன மாமனார்… இறுதியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!

By Nanthini on புரட்டாதி 9, 2025

Spread the love

தெலுங்கானா மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. குடும்ப பாசத்தை தவறாக பயன்படுத்தி மிரட்டல் மற்றும் அவமானத்தால் ஒரு பெண்ணின் உயிரை பறித்துள்ளது. ஸ்ரீனிவாஸ் நகரை சேர்ந்த நவீன் மற்றும் யோஷிதா, எட்டு வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் குழந்தை இல்லாத துறை அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு துயரமாக மாறி உள்ளது. இந்நிலையில் யோசிதாவின் சின்ன மாமனார் அடிக்கடி வீட்டுக்கு வந்துள்ளார். யோசிதாவின் மன உளைச்சலை கவனித்து அவர் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தது மட்டுமல்லாமல் ரகசிய கேமரா மூலமாக அந்தரங்க வீடியோவை பதிவு செய்து மிரட்டியுள்ளார்.

உன் கணவனால் குழந்தை கிடைக்காது, என்னுடன் வா என்று கூறி மன அழுத்தம் கொடுத்துள்ளார். நீ வரவில்லை என்றால் அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டியதால் யோசிதா தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து உள்ளார். தன்னுடைய தாய் சுஜாதாவிடம் நடந்ததை கூறிய அவர், ராமகிருஷ்ணாவை எச்சரிக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து மிரட்டியதால் ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் யோசிதா தற்கொலை செய்து கொண்டார்.

   

நவீன் வேலைக்குச் சென்ற நேரத்தில் அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து யோஷிதாவின் தாயார் சுஜாதா அளித்த புகாரின் அடிப்படையில் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.