தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே சில கட்சிகள் கூட்டணியை அமைத்துவிட்டு வெற்றி வாகை சூடுவதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு சில கட்சிகள் மட்டும் இன்னும் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகின்றன.
இந்நிலையில் 2026 தேர்தலுக்காக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. திமுக மற்றும் அதிமுக தலைவர்களின் வெற்றிக்கான ஆருடம் வெளியாகி உள்ளது. இத்தனை நாட்களாக திமுக 200 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என கூறி வந்த நிலையில், அதிமுக 210 தொகுதிகளில் வெற்றி என இபிஎஸ் புதிதாக கூறியுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. நடிகர் விஜய் 150 தொகுதிகளை குறி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
