“இரவில் வந்த அழைப்பு…” நம்பரை பிளாக் செய்து கணவரிடம் கூறிய பெண்… பயத்தில் 27 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. பகீர் பின்னணி…!!

By Devi Ramu on ஆவணி 26, 2026

Spread the love

சென்னை சாலிகிராமம் மதியழகன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த ரவீந்திரன் என்பவரின் மனைவி ருசிதா (27). ரவீந்திரன் தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு ருசிதாவிற்கு இரு வேறு அறியப்படாத எண்களில் இருந்து அழைப்புகள் வந்துள்ளன. அதில் பேசிய நபர், ருசிதாவின் தனிப்பட்ட விடியோக்கள் தனியிடம் இருப்பதாகக் கூறி, அதனை அவரது கணவருக்கு அனுப்பி வைப்பதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து ருசிதா தனது கணவரிடம் தெரிவித்துவிட்டு, அந்த எண்களை பிளாக் செய்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை காலை ரவீந்திரன் பணிக்குச் சென்ற நிலையில், ருசிதா போன் கால்களை எடுக்காததால் சந்தேகமடைந்த ரவீந்திரன் வீட்டு உரிமையாளரைச் சென்று பார்க்கச் சொல்லியுள்ளார். கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததால், குளியலறை ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ருசிதா சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தகவலறிந்து வந்த விருகம்பாக்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மிரட்டல் விடுத்த செல்போன் எண்களை வைத்துப் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.