“இவ வீட்டுக்கு வந்த நேரமே சரியில்ல” திட்டிய மாப்பிள்ளை வீட்டார்… திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

By Soundarya on ஐப்பசி 25, 2025

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் மணியார்பாளையம் கிழாத்துகுழி கிராமத்தில் வசிப்பவர் கலியன் மகள் புவனேஸ்வரி. 19 வயதான இவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் நவீன் குமார் என்பவரை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மோனேஸ்வரி மாமியார் ராஜாம்பாள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக உடல் குறைவால் இறந்துள்ளார். இதனால் நவீன் குமாரின் குடும்பத்தினர் மோனேஸ்வரி வந்த நேரம் சரியில்லை என்று கூறி பிரச்சினை செய்துள்ளார்கள் .

இதனை அடுத்து கலியன் தன்  மகள் மோனேஸ்வரியை கடந்த சில தினங்களுக்கு முன்பாக தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். இதனால் மனவேதனையில் இருந்த மோனேஸ்வரி சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் அவரை மெட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.