வங்கிகளில் கணக்குகளை பராமரிப்பவர்கள் 10 வருடங்கள் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனையில் செய்ய விட்டால் அந்த வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை ரிசர்வ் வங்கியின் டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு தானாகவே மாற்றம் செய்யப்பட்டு விடும். இப்படி கிடைக்கும் நிதிரியை மக்களிடம் நிதி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் கல்வி வளர்ச்சி திட்டங்களுக்காகவும் ரிசர்வ் வங்கி பயன்படுத்தி வருகிறது.
வங்கி கணக்கு தொடங்குபவர்கள் லாக்கர்களில் நகைகள் உள்ளிட்ட உடமைகளை பாதுகாப்பாக வைப்பவர்கள் தங்களுக்கு ஏதாவது விரும்ப தகாத நிகழ்வுகள் நடந்தால் அந்த பணத்துக்கும் லாக்கரிலுள்ள உடமைக்கு பொறுப்பாக வாரிசுதாரராக ஒருவரை மட்டும் தற்போது நியமிக்கலாம். இதில் வங்கி திருத்த சட்ட விதிகளின்படி நிதி அமைச்சகம் மாற்றத்தை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிவியின்படியே வங்கியில் கணக்கு வங்கிகளில் லாக்கர் வசதி வைத்திருப்பவர்கள் வாரிசுதாரராக நான்கு பேரை நியமித்துக் கொள்ளலாம். இந்த வசதி அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது.
