காய்கறி சந்தையில் மக்கள் பொதுவாக தக்காளி, வெங்காயம் இரண்டையும் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை அதிகமாக உள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை உயர ஆரம்பித்துள்ளது.
அதன்படி ஒரு கிலோ தக்காளியின் விலை 35 முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிலோ 50 ரூபாயை தாண்டி உள்ளது. வெங்காயத்தின் வரத்து அதிக அளவில் இருப்பதால் நூறு ரூபாய்க்கு 6 முதல் 7 கிலோ வரை வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 40 முதல் 50 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 45 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட், உருளைக்கிழங்கு , குடைமிளகாய் ஆகியவை கிலோ 40 ரூபாய்க்கும், வாழைப்பூ 15 ரூபாய்க்கும், பாகற்காய் 30 ரூபாய்க்கு, சுரைக்காய் 35 ரூபாய்க்கும், அவரைக்காய் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர கேரட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் காலிபிளவர் ஆகியவை 15 ரூபாய்க்கும், இஞ்சி கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
