திருச்சி மாவட்டம் சீனிவாசா நகர் பகுதியில் பெரம்பலூரை சேர்ந்த அந்தோணி என்பவர் மகளின் படிப்பிற்காக வாடகை வீட்டில் தங்கி இருந்தார். இவரது மனைவி கலா. மகள் மீரா ஜாஸ்மின் எம்எஸ்சி கணிதம் படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை மீரா தனது பெற்றோர்களிடம் நேர்முகத் தேர்வு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் மீரா வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் செல்போன் சிக்னலை வைத்து சனமங்கலம் காப்பு காட்டு பகுதிக்கு சென்றனர்.
அங்கு உடல் முழுவதும் எரிந்த நிலையில் இறந்த கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பெண்ணின் உடலுக்கு அருகில் இரண்டு பீர் பாட்டில்கள் இருந்தது. எனவே வாலிபர்கள் இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்து மீராவை எரித்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
