மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இதனால், நவ.6ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது “மொன்தா” புயலாக மாறி ஆந்திராவில் கரையை கடந்த நிலையில், வங்கக்கடலில் அடுத்த புயல் சின்னம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
