வரும் தைப்பொங்கலை முன்னிட்டு, நவ.15 ஆம் தேதி முதல் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார். அதோடு இந்த முறை 15 ரக சேலைகள், 5 ரகங்களில் வேஷ்டிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, பொங்கல் பரிசுத்தொகையாக 5,000 ரூபாய் வழங்கப்படும் என்று தகவல் வெளியான நிலையில், விரைவில் முதல்வர் ஸ்டாலின் இதுதொடர்பான மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சர் சக்கரபாணி கூறியிருந்தார்
