மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் பகுதியில், காதலனை நம்பிச் சென்ற 21 வயது இளம்பெண் கொடூரமான கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷம்பு என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, அந்தப் பெண்ணை நள்ளிரவில் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று சீரழித்துள்ளார். இந்தத் துரோகத்தால் மனமுடைந்த இளம்பெண், அடுத்த நாள் காலை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றபோது, இடுப்பு எலும்பு முறிந்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த ஷம்பு, பங்கஜ் மற்றும் ராவத் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இவர்கள் ஐதராபாத் தப்பிச் செல்ல முயன்றபோது பிடிபட்டது குறிப்பிடத்தக்கது. காதலின் பெயரால் ஒரு பெண்ணின் வாழ்க்கை சிதைக்கப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
