“கட்சி அலுவலகத்திலேயே கத்திக்குத்து…!” திருச்சி காங்கிரஸ் பிரமுகர் அர்ஜுனுக்கு நேர்ந்த பயங்கரம்…. சக நிர்வாகியின் வெறிச்செயல்…!!

By Devi Ramu on தை 8, 2026

Spread the love

திருச்சியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் ஆய்வுக் கூட்டத்தின் போது, கட்சி நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளரான அர்ஜுன், கட்சி அலுவலக வாசலில் நின்றிருந்தபோது, மற்றொரு நிர்வாகியான தென்னூர் ராகவேந்திரா என்பவரால் பட்டாக்கத்தியால் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலில் அர்ஜுன் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், பணப் பரிமாற்றம் தொடர்பான முன்விரோதமே இந்த மோதலுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட அர்ஜுன், திருச்சி மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், ராகவேந்திரா தன்னைக் கொலை செய்ய முயன்றதுடன், தனது குடும்பத்தினரையும் தரக்குறைவாகப் பேசி மிரட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார். உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனக்கும் தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே நடந்த இந்த வன்முறைச் சம்பவம் திருச்சியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.