“கொஞ்சம் கூட பயமில்லையா…?” தனியாக இருந்த பெண்கள்… பட்டப்பகலில் வாலிபர்கள் செய்த காரியம்… அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்…!!

By Devi Ramu on ஆடி 15, 2026

Spread the love

மேற்கு டெல்லியின் ரஜோரி கார்டன் பகுதியில் உள்ள ஜே மற்றும் ஜி பிளாக் குடியிருப்புப் பகுதிகளில், அடுத்தடுத்து அரங்கேறிய இரண்டு வழிப்பறிச் சம்பவங்கள் அப்பகுதி பெண்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பட்டப்பகலிலேயே குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து ஒரு பெண்ணின் கைப்பையை நொடிப் பொழுதில் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர். மற்றொரு சம்பவத்திலும் இதேபோன்று இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் ஒரு பெண்ணை இலக்காகக் கொண்டு துணிகரமாக வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த இரண்டு அதிர்ச்சிச் சம்பவங்களும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி, தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. தலைநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இத்தகைய வழிப்பறிச் சம்பவங்களும், குற்றவாளிகளின் துணிச்சலும் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.