குஜராத் மாநிலம் வடோதராவில் i20 கார் ஒன்று பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது அதிவேகமாக மோதி விபத்தை ஏற்படுத்திய அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த கோரமான விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், குழந்தைகள் உட்பட பல பேர் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த நபர் சம்பவ இடத்திலிருந்து உடனடியாக தப்பி ஓடியுள்ளார்.
விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு போலீசார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். எனினும், விபத்தை ஏற்படுத்திய i20 காரின் முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் எவ்வித நம்பர் பிளேட்டும் இல்லாததால், காரின் உரிமையாளரையோ அல்லது அதை ஓட்டி வந்த நபரையோ உடனடியாக அடையாளம் காண்பதில் போலீசாருக்கு கடும் சவால்களும் முட்டுக்கட்டைகளும் ஏற்பட்டுள்ளன.
https://twitter.com/DixitGujarat/status/2077338636828488055/video/1
நம்பர் பிளேட் இல்லாததால் கார் எண்ணை வைத்து தேட முடியாத நிலையில், அந்த கார் பயணித்த முந்தைய வழிகள் மற்றும் மாற்றுச் சாலைகளில் உள்ள மற்ற சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளியைக் கண்டறியும் தீவிர முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். இந்த அலட்சியமான மற்றும் ஆபத்தான ஓட்டுதலால் ஏற்பட்ட விபத்து, அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
