“அட கொடுமையே… சாப்பாட்டுக்கு இப்படியா…? வெறும் வடா பாவ்-க்காக ஓட்டல் ஊழியருக்கு நேர்ந்த பயங்கரம்… கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!”

By Swetha on ஆடி 15, 2026

Spread the love

பூனே மாவட்டம் ஷிரூர் தாலுகாவில் உள்ள கரேகான் கிராமத்தில், காலை உணவு பரிமாறுவதில் தாமதம் ஏற்பட்டதால் உணவக ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ‘சிவசக்தி ஸ்வீட் ஹோம்’ என்ற உணவகத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காவல்துறை புகாரின்படி, வடா பாவ் பரிமாற தாமதமானதால் ஆத்திரமடைந்த ஈஸ்வர் நவ்லே என்ற வாடிக்கையாளர், உணவக ஊழியரான ராஜு தேவாசி என்பவரை கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஊழியர் தாக்கப்படும் காட்சிகள் அடங்கிய அந்த வீடியோ இணையவாசிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் வலுக்கச் செய்துள்ளது.

   

https://twitter.com/HateDetectors/status/2077380158781358118/video/1

   

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ளூர் மக்கள் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர் மீது அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.