கட்டுன புருஷன் செய்ற வேலையா இது?… பெற்றோருக்கு பிடிக்காததால் மனைவியின் ஆபாச வீடியோவை செல்போனில்… பெரும் பரபரப்பு சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 7, 2025

Spread the love

கர்நாடக மாநிலத்தில் வசித்து வரும் இந்திரகுமார் என்பவருக்கு நளினா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு யஷ்வாசி (32) என்ற மகன் உள்ள நிலையில் இந்திரக்குமாரும் நளினாவும் துமகூரு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள். இந்நிலையில் இந்த தம்பதியின் மகன் ஒரு இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்த பிறகு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திய யஷ்வாசி, அவருடைய மனைவியிடையே திடீரென்று புயல் வீச தொடங்கியுள்ளது. அந்தப் பெண்ணை யஸ்வாசியின் பெற்றோருக்கு பிடிக்காததால் அந்த பெண்ணை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் தங்கள் மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க இருவரும் முடிவு செய்துள்ளனர்.

இதனை அறிந்த அந்த இளம் பெண் அவர்களை தட்டி கேட்டுள்ளார். இதனால் தனது பெற்றோருடன் சேர்ந்து யஷ்வாசி, தன்னுடைய காதல் மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார். இது பற்றி போலீசில் புகார் அளித்தால் தன்னுடன் நெருக்கமாக இருந்தபோது எடுத்த ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று அந்த பெண்ணை அவர் மிரட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் மாமனார் மாமியார் உட்பட 3 பேரையும் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.