மூளைச் சாவு அடைந்த இளைஞர்… திடீரென இறுதி ஊர்வலத்தில் நடந்த அதிசயம்… அதிர்ச்சி சம்பவம் …!!!

By Srimathi on புரட்டாதி 7, 2025

Spread the love

உடலில் முக்கிய பாகங்களில் ஒன்றாக மூளை கருதப்பட காரணம், என்ன தெரியுமா? மூளை ஆணையிட்டால்தான் நம் உடலில் மற்ற பாகங்கள் செயல்படும். மேலும் ஒருவர் மூளைச்சாவடைந்து விட்டால், அவர் உயிரை காப்பாற்ற வேறு வழியே இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் எப்போதும் இயற்கை ஒரே மாதிரியாக செயல்படுவது இல்லை, சில சமயங்கள் அதிசயங்கள் நிகழ்வது உண்டு.

அப்படி தான் சமீபத்தில் மகாராஷ்டிராவிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்தவர் பாஹூ லாச்கே (19). இவர் உடலிலும் தலையிலும் பலத்த காயத்துடன் தனியார் மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இவர் மூளை சாவு அடைந்து விட்டதாகவும், பிழைக்க வாய்ப்பில்லை என்றும் கூறிய நிலையில், இவரது உறவினர்கள் இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த பொழுது, பாஹூ லாச்கே திடீரென இரும்பி இருக்கிறார். பின்னர் தன் கை, கால்களை அசைத்திருக்கிறார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இறந்து விட்டதாக சொல்லப்பட்ட இளைஞர் தற்போது மீண்டும் உயிருடன் வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.