தீபாவளி பண்டிகைக்கு முன்பாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற சம்பளதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 3 % அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்த முடிவை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் எடுக்கப்படும் என கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அகவிலைப்படி குறித்த முடிவு, தீபாவளி பண்டிகைக்கு முன் எடுக்கப்படும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வு தீபாவளி பண்டிகைக்கு முன் வரலாம். தற்பொழுது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 55 % மாக உள்ளது, 58 % மாக அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இந்த அதிகரிப்பு 2025 ஜூலை மாதம் முதல் செயல்படுத்தப்படலாம். இந்த காலகட்டத்தில் அக்டோபர் மாத சம்பளத்துடன் 3 மாத நிலுவைத் தொகையும் வழங்கப்படும் என தகவல் வெளியாகின.
பொதுவாக ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படியை மத்திய அரசு அதிகரிக்கும். முதல் முறையாக ஜனவரி – ஜூன் மாதத்திற்கான உயர்வை ஹோலி பண்டிகைக்கு முன்னர் அறிவிக்கப்படும். இரண்டாவது முறையாக ஜூலை – டிசம்பர் மாதத்திற்கான உயர்வை தீபாவளி பண்டிகைக்கு முன் அறிவிக்கப்படும். தற்பொழுது மத்திய அரசு ஊழியர்களின் கவனம் 8 ஆவது உதய குழுவின் மீதுள்ளது புதிய ஊதிய குழு, 2025 ஜனவரி மாதம் முதல் செயல்படுத்தப்படும். ஆனால் இந்த ஆணையத்தின் குறிப்பு விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. மேலும் புதிய ஊதிய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்த ஊதிய குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட இன்னும் 2 ஆண்டுகள் ஆகும். எனவே மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதியத்தை 2027 ஆம் ஆண்டு இறுதிக்குள் அரசு நிர்ணயிக்கலாம்.
