காலையிலேயே ஷாக்… அதிரடி நீக்கம்… இபிஎஸ் எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சியில் பாஜக…!

By Nanthini on புரட்டாதி 7, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள் பலரும் இபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ளனர்.

அதன் வெளிப்பாடாக நேற்று முன்தினம்  செங்கோட்டையன் இபிஸ்க்கு எதிராக திரும்பி அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என பத்து நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இபிஎஸ் நேற்று ஆலோசனை நடத்தி செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளார்.  அதிமுகவில் இருந்து  நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவதால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

   

இதனிடையே செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியது சர்வாதிகாரம் என எதிர் அணியினர் சாடினாலும் ஜெயலலிதா மாதிரி தைரியமான முடிவு என இபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். பாஜக சார்பில் அழுத்தம் கொடுத்தாலும் மீண்டும் ஒன்றிணைப்பு இல்லை என உறுதியாக உள்ளாராம். பொதுச் செயலாளர் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு, பாஜக ஓவராக அழுத்தம் கொடுத்தால் அவர்களை விட்டுவிட்டு விஜயின் TVK கட்சியுடன் கூட்டணி வைக்கலாமா என ஆலோசித்ததாக பேசப்படுகிறது.