எதிர்கால நலனுக்காக நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், பிக்சட் டெபாசிட் அல்லது தபால் அலுவலர் திட்டங்களை தேர்வு செய்யலாம். இந்திய தபால் அலுவலகத்தால் நடத்தப்படும் பல வகையான திட்டத்தில், நீங்கள் நல்ல லாபம் ஈட்ட முடியும். இதில் மிக முக்கியமான இரு திட்டங்கள் உள்ளன.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், 8.2% வருமானத்தை ஈட்ட முடியும். இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒரு மொத்த தொகை, அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். உதாரணமாக நீங்கள் இந்த திட்டத்தில் 30 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ. 2.46 லட்சம் கிடைக்கும். ஏறத்தாழ மாதத்திற்கு ரூ. 20,500 வட்டி கிடைக்கும்.
மாதாந்திர வருமானத் திட்டம்
இந்தத் திட்டம் 7.4 % வருமானத்தை தருகிறது. இத்திட்டத்தின் முடிவு காலம் 5 ஆண்டுகள். இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு மொத்த தொகை முதலீடு செய்து, மாத வட்டி பெறலாம். இந்தத் திட்டத்தில் உங்கள் மனைவியுடன் 5 ஆண்டுகளுக்கு ரூ. 15 லட்சம் முதலீடு செய்தால், மாதம்தோறும் ரூ. 9250 வட்டி கிடைக்கும். இந்தத் திட்டத்தில் 1 ஆண்டுக்கு, ரூ. 1.11 லட்சம் வட்டி கிடைக்கும்.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்
இந்தத் திட்டத்தில் மாதத்திற்கு ரூ. 1000 வீதம், 15 ஆண்டுகள் முதலீடு செய்தால். மொத்தம் ரூ. 1,80,000 முதலீடு செய்வீர்கள். இந்தத் திட்டத்தில் 7.1% வருமானம் விகிதம் வழங்கப்படுகிறது. இதன் முதிர்ச்சியின் பொழுது, மொத்தம் ரூ. 3,15,000 கிடைக்கும். இதில் உங்களுக்கு ரூ. 1.45 லட்சம் லாபம் மட்டுமே கிடைக்கும்.
