திக் திக் நிமிடங்கள்…! மின்னல் வேகத்தில் வந்து மோதிய கார்… நிலைகுலைந்து விழுந்த வாலிபர்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 19, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் விகாராபாத் பகுதியில், திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிய நபர் மீது அதிவேகமாகக் கட்டுப்பாட்டை இழந்து வந்த கார் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலையைக் கடந்து சென்ற முகமது தாஹிர் அலி என்பவர் மீது, அப்பகுதியில் அதிவேகமாக வந்த இரண்டு கார்களில் ஒன்று திடீரென வளைந்து வந்து மோதியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த தாஹிர் அலி மீட்கப்பட்டு மெடிகோவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து நடந்தவுடன் காரில் இருந்தவர்கள் நிலைதடுமாறி இறங்கிப் பார்த்ததுடன், உடனடியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.