மகாராஷ்டிராவின் கல்யாண் அருகேயுள்ள வரப் பகுதியில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில், ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த கும்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருசக்கர வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்திறங்கிய மர்ம நபர்கள், மேடையில் நடந்துகொண்டிருந்த கலை நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்துமாறு அச்சுறுத்தி ரகளையில் ஈடுபட்டனர். மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய இந்தக் காட்சி இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முந்தைய தகராறின் எதிரொலியாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் டிட்வாலா போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இதில் தொடர்புடைய நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சந்தேகத்தின் அடிப்படையில் நால்வர் பிடிபட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மோதலுக்கான சரியான பின்னணி குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
