“ப்ளீஸ்.. என்னை காப்பாற்றுங்க…” நடுரோட்டில் சிறைப்பிடித்த வாலிபர்… கதறி துடித்த பெண்…. வேடிக்கை பார்த்தபடி வீடியோ எடுத்த இரக்கமற்ற பொதுமக்கள்… வைரலாகும் பகீர் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 12, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் குருகிராமில் பரபரப்பான நடுரோட்டில் இளம் பெண் ஒருவரை, மனநிலை பாதிக்கப்பட்டவாறு நடந்துகொண்ட வாலிபர் ஒருவர் பல மணி நேரமாகப் பலவந்தமாகச் சிறைப்பிடித்து வைத்துள்ளான். அந்தப் பெண் அவனிடமிருந்து தப்பிக்கப் போராடியபடியும், “என்னைக் காப்பாற்றுங்கள்” என அழுது கதறியபடியும் இருந்துள்ளார்.

ஆனால், அந்தப் பெண்ணைக் காப்பாற்ற அருகில் இருந்த பொதுமக்கள் யாரும் முன்வரவில்லை. மாறாக, அங்கிருந்த கூட்டத்தினர் அந்த அதிர்ச்சி சம்பவத்தை வேடிக்கை பார்த்தபடியும், தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்தபடியும் நின்றுள்ளனர். பொதுமக்களின் இந்த இரக்கமற்ற செயல் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார், அந்த வாலிபனைப் மடக்கிப் பிடித்துப் பெண்ணை மீட்டனர். நடுரோட்டில் நடந்த இந்த பகீர் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த வாலிபருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.