பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், சளி, இருமல் மற்றும் மூக்கடைப்புப் பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும் வகையில் “ஆயுர்வேத ஹூக்கா” ஒன்றை அறிமுகப்படுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அதிமதுரம், மஞ்சள், கடுகு, பசு நெய், காக்ரா சிங்கி மற்றும் கற்பூரம் ஆகியப் பொருட்களை ஹூக்காவில் வைத்து, அதிலிருந்து வரும் புகையை இழுத்தால் உடலுக்கு நல்லது எனத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், எந்தப் பொருளை எாித்தாலும் கார்பன் மொனாக்சைடு மற்றும் ஆபத்தான புகைத் துகள்கள் உருவாவதால், இது நுரையீரலுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி மருத்துவ நிபுணர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் காரசாரமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. “இது ஒன்னுதான் பாக்கி இருந்தது, அடுத்து ஆயுர்வேத மதுபானம் தான் வருமோ?!” என்றும் “புகையை இழுப்பது எப்படி ஆரோக்கியமாகும்?!” என்றும் நெட்டிசன்கள் பாபா ராம்தேவை மீம்கள் போட்டு அர்ச்சித்து வருகின்றனர்.
