உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், போதை மயக்கத்தில் மயங்கிக் கிடந்த இளைஞரின் தலையில் மற்றொரு நபர் சிறுநீர் கழித்து சிரிக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட நபர், பாதிக்கப்பட்ட இளைஞரை இழிவுபடுத்தும் வகையில் அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில், சிறுநீர் கழித்த அதே நபர் பின்னர் ஒரு பாட்டிலில் இருந்த தண்ணீரை பாதிக்கப்பட்ட இளைஞரின் தலையில் ஊற்றி கழுவுவதும் பதிவாகியுள்ளது. இந்த கொடூர சம்பவம் நடந்து சுமார் 20 நாட்கள் இருக்கும் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/madanmohansoni/status/2100136631965741360/video/1
இணையத்தில் பரவிய இந்த வீடியோவின் அடிப்படையில் கான்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றச்சாட்டிற்கு உள்ளான நபரை அடையாளம் கண்டு, அவரை விரைவில் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
