தெலங்கானா உணவுப் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரிகள் புதன்கிழமை ஹைதராபாத்தில் உள்ள தில்சுக்நகர் பஹார் பிரியாணி கஃபே உணவகத்தில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது மனித நுகர்வுக்கு தாகாத பல நாட்கள் பழமையான உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
அங்கு சமைக்காமல் வைக்கப்பட்டிருந்த 50 கிலோகிராம் கெட்டுப்போன கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, இறால் மற்றும் பிற காலாவதியான உணவுப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து உடனடியாகக் குப்பையில் வீசி அழித்தனர்.
மேலும், ஆய்வுக்கூட பரிசோதனைக்காக உணவகத்தில் இருந்த சில உணவு மாதிரிகளைச் சேகரித்த அதிகாரிகள், அந்த உணவகத்தின் FSSAI உரிமத்தை தற்காலிகமாக நீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளனர்.
