“மனிதநேயம் செத்துப்போச்சா…? உணவின்றி வாழும் பிச்சைக்காரர்கள் மீது நடந்த கொடூர தாக்குதல்… குடிபோதையில் வந்தவரின் வெறிச்செயல்… பகீர் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 16, 2026

Spread the love

சீனாவின் ஒரு முக்கிய நகரத்தின் வீதியில், கண்மூடித்தனமான குடிபோதையில் வந்த நபர் ஒருவன், வீதியில் தங்கியிருந்த ஏழைப் பிச்சைக்காரர்களை மிருகத்தனமாகத் தாக்கி அவர்களிடம் இருந்த சொற்பப் பணத்தைப் பறித்துச் சென்ற பயங்கரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மது அருந்துவதற்காகப் பணம் கேட்டு வந்த அந்த நபர், பிச்சைக்காரர்கள் தங்களிடம் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்துள்ளான். இதையடுத்து, இரண்டு ஏழைப் பிச்சைக்காரர்களையும் இரக்கமின்றித் தர தரவென இழுத்துச் சுவரில் மோதி, ரத்தக் களறியாகும் வரை கொடூரமாக அடித்து அவர்கள் பிச்சை எடுத்து வைத்திருந்த சொற்பக் காசையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.

   

இந்தக் கொடூரத் தாக்குதலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்போரின் நெஞ்சை நடுங்க வைத்துள்ளது. “உலகம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்தாலும் மனிதநேயம் முற்றிலும் செத்துவிட்டது” என்று கொதித்தெழும் நெட்டிசன்கள், தெருவில் வாழும் ஏழைகள் மற்றும் பிச்சைக்காரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்த வெறிபிடித்த குடிகாரன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் சீன நிர்வாகத்திற்கு வலியுறுத்தி வருகின்றனர்.