“டேய் மச்சான், இனிமே என்னால முடியாதுடா, நான் சாகப் போறேன்”… நண்பருடன் செல்போனில் பேசியபடியே ரயில் முன் பாய்ந்த வாலிபர்… அதிர்ச்சி தரும் காரணம்…!

By Nanthini on கார்த்திகை 27, 2025

Spread the love

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் ஆறாவது தெருவில் வசித்துவரும் கோகுல் பிரசாத் (31) என்பவருடைய தந்தை போண்டாமணி கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் உயிர் இழந்துவிட்டார். முன்னதாக தந்தை உடல்நிலை சரியில்லாத போது மருத்துவ செலவுக்காக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என பலரிடம் கோகுல் கடன் வாங்கியுள்ளார். தற்போது தாயின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மேற்கொண்டு அதிகமாக கடன் வாங்கியுள்ளார். இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு கோகுலுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்த கோகுல் தன்னுடைய நண்பருடன் செல்போனில் பேசிக்கொண்டே என்னாவூர் கேட் அருகே சென்றுள்ளார். பிறகு தன்னுடைய நண்பரிடம் “ரயில் வருகிறது, நான் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறேன் என்று பேசிக்கொண்டே ரயில் முன் பாய்ந்து விட்டார். இதில் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே கோகுல் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வரைந்த போலீசார் கோகுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.