குஷியோ குஷி..! ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5000..? சற்றுமுன் வெளியான புதிய தகவல்…!!

By Soundarya on கார்த்திகை 27, 2025

Spread the love

கடந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் வேஷ்டி சேலை அரசு வழங்கியிருந்தது. ஆனால் சில வருடங்களாக வழங்கி வந்த ரொக்கம் மக்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு 5000 ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளதாக்க அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்காக சுமார் 10,000 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த நிதியை திரட்டுமாறு நிதித்துறைக்கு அரசு உத்தரவிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த ரொக்கத் தொகையுடன் பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்டவை வழங்கவும் அரசு பரிசீலித்து வருகிறதாம். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பொங்கல் பரிசுத்தொகை குறித்த அறிவிப்பு எப்போது வரும் என மக்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறர்கள்.