வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், டிட்வா புயலாக வலுப்பெற்றிருப்பதாக இந்திய அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்துள்ளது. இது சென்னைக்கு தென்கிழக்கே திசையில் சுமார் 700 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிட்வா புயலானது வடமேற்கு திசையை நோக்கி நகரும்என்றும் கணிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயல் எதிரொலியாக தமிழகத்திற்கு 2 நாள்கள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
