கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரையின்போது அவரை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். இந்த நிலையில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். இந்த கோர சம்பவத்தில் 10 குழந்தைகள், 17 பெண்கள், 9 ஆண்கள் என 39 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேர்தல் சுற்று பயணத்தில் இவ்வளவு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
So disturbing! Heart-breaking! 😢
We need to get out of the hero-worshipping mentality. No celebrity is worth risking a life. #KarurStampede#VijayRally pic.twitter.com/FAlgDjKUkG— Satish Acharya (@satishacharya) September 28, 2025
இந்நிலையில் இணையத்தில் மனதை உலுக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தந்தை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த தனது குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு மருத்துவமனைக்குள் அழுதபடி ஓடி வருகிறார். இதை பார்க்கும்போது மனம் உடைந்து போகிறது.
