விஜய் பேசும்போது “திடீரென அணைந்த மின் விளக்குகள்”… பரபரப்பு குற்றசாட்டை வைத்த எடப்பாடி..!!

By Soundarya on புரட்டாதி 28, 2025

Spread the love

கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி ஒன்பது குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்தினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுடைய குடும்பத்துடன் சந்தித்து ஆறுதலும் தெரிவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய  அவர், ” விஜய் பிரச்சாரத்தில் இதற்கு முன்பு எந்த பிரச்சனையும் இல்லை. TVK ஏற்கனவே நான்கு மாவட்டத்தில் பிரச்சாரம் செய்துள்ளது.

ஏற்கனவே நடந்த கூட்டத்தை பார்த்து தமிழக அரசும், காவல்துறையும் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். விஜய் பேசும்போது திடீரென மின் விளக்குகள் அணைந்ததால்  தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு திமுக அரசு முறையான பாதுகாப்பு அளித்து நடுநிலையோடு செயல்பட்டு இருக்க வேண்டும். கூட்டத்திற்கு ஏற்றவாறு தலைவர்களும் நடந்து கொள்ள வேண்டும். எப்படிப்பட்ட நிலை இருந்தது என்று ஆய்வு செய்ய வேண்டும். ஒரு நபர் கமிஷன் அமைத்தது நோக்கம் என்ன என்பது தெரியவில்லை. கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதில் கட்சிகளுக்கு அனுபவம் உண்டு. ஒரு கட்சித் தலைவர் இன்னொரு தலைவருக்கு அறிவுரை கூறக்கூடாது” என்று கூறியுள்ளார்.