BREAKING: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் நிதியுதவி…! விஜய் சற்று முன் அறிவிப்பு…!!

By Devi Ramu on புரட்டாதி 28, 2025

Spread the love

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று இரவு 7:30 மணிக்கு கரூரில் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு வந்தடைந்தார். 12 மணிக்கு அவர் வருவார் என கூறப்பட்ட நிலையில் விஜய் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. அவரை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். இந்த நிலையில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். இந்த கோர சம்பவத்தில் குழந்தைகள் உள்பட  39 பேர் உயிரிழந்தனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்து நேற்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார். இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.