“4 ஆண்டுகள் திருமணமான பெண்ணுடன்…” என்கூட பேசாம போவியா…? வீடியோவை காட்டி மிரட்டிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

By Devi Ramu on புரட்டாதி 5, 2026

Spread the love

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 34 வயது திருமணமான பெண் ஒருவர், திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்தபோது பக்கத்து வீட்டில் வசித்த ராஜேஷ் (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் அப்பெண் தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.

சொந்த ஊருக்கு வந்த பெண்ணைப் பார்க்க வந்த ராஜேஷ், அவர் குளிப்பதை ரகசியமாகத் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். “என்னுடன் பேசாவிட்டால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன்” என மிரட்டி வந்த நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ், அந்தப் பெண்ணின் குளியல் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

   

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், வீடியோவை நீக்குமாறு கேட்டபோது ராஜேஷ் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், அரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.