“மண்ணுக்கு அடியிலிருந்து கேட்ட சத்தம்…” சாப்பாடு, தண்ணீரின்றி 3 நாட்களாக பிறந்த குட்டிகளுடன் தவித்த நாய்… கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்…!!

By Devi Ramu on புரட்டாதி 5, 2026

Spread the love

கேரளாவில் பெய்த கனமழையைத் தொடர்ந்து குடியிருப்புப் பகுதி அருகே சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. மழை குறைந்த பிறகும், மண்ணுக்கு அடியிலிருந்து தொடர்ந்து மெல்லிய முனகல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்துள்ளது. இதைக் கவனித்த உள்ளூர் மக்கள், சத்தம் வந்த இடத்தை உடனடியாகத் தோண்டத் தொடங்கினர்.

அப்போது, சேற்றுக்குள் புதைந்த நிலையில் தாய் நாயும், அதன் அருகே இரு புதிதாகப் பிறந்த குட்டிகளும் இருப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சுமார் 3 நாட்களாக உணவோ தண்ணீரோ இன்றி அவை மண்ணுக்குள் சிக்கியிருந்தது தெரியவந்தது. மக்களைக் கண்டதும் உடனடியாக அவை பத்திரமாக வெளியே மீட்கப்பட்டு, சேறுகள் அகற்றப்பட்டுத் துணியால் போர்த்தி கதகதப்பாக்கப்பட்டன.

   

தன் குட்டிகள் பாதுகாப்பாக இருப்பதைப் பார்த்த தாய் நாய், நிம்மதியிலும் களைப்பிலும் கண்ணீர் வடித்த காட்சி காண்போரை நெகிழ வைத்தது. அக்குடும்பத்திற்குத் தொலைபேசி கம்பத்தின் அருகே தற்காலிக இருப்பிடம் அமைத்துத் தந்த மக்கள், உணவும் தண்ணீரும் வழங்கி அவற்றை அன்போடு பராமரித்து வருகின்றனர்.