“16 வயது சிறுமியுடன் காதல்…” எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்… ரயிலில் பாய்ந்து உயிரை விட்ட காதல் ஜோடி…. பெரும் சோகம்…!!

By Devi Ramu on ஆடி 17, 2026

Spread the love

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த அழகிரிநகர் பகுதியைச் சேர்ந்த கன்சிராம்ராணா (21) என்ற இளைஞரும், அதே ஊரைச் சேர்ந்த அறிவுஜோதி (16) என்ற சிறுமியும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் இருவீட்டுப் பெற்றோர்களுக்கும் தெரியவந்த நிலையில், அவர்கள் காதலுக்குப் பலத்த எதிர்ப்பு தெரிவித்து இருவரையும் கடுமையாகக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மனவேதனைக்கு ஆளான இளம் ஜோடியினர், வீட்டை விட்டு ரகசியமாக வெளியேறி மொரப்பூர் மற்றும் தொங்கனூர் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதிக்குச் சென்றுள்ளனர்.

அங்கு சென்னை நோக்கி அதிவேகமாகச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன்பாக திடீரெனப் பாய்ந்து இருவரும் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர். தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் கிடந்த இவர்களது சடலங்களை மீட்ட ரயில்வே போலீசார், தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.