பருத்திவீரன் விவகாரம் : “ஒருவரை விமர்சிப்பதற்கு முன்னாடி உங்களுக்கு அது வேணும்”… அமீருக்கு வக்காலத்து வாங்கிய சினேகன்..

By Begam on நவம்பர் 28, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் அமீர். இவர் நடிகர் கார்த்திக்கை திரையுலகில் முதன்முதலில் அறிமுகப்படுத்திய திரைப்படம் தான் பருத்திவீரன். இயக்குனர் அமீர் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய வெற்றியை தந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் மட்டும் இல்லாமல் சரவணன், கஞ்சா கருப்பு, பொன்வண்ணன், பிரியாமணி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள்.

   

பொதுவாக இந்த திரைப்படத்தின் கதை அம்சம் எவ்வளவு சிறந்ததாக அமைந்ததோ அதேபோல இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஒவ்வொன்றும் மிகவும் தரமாகவும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் ரசிகர்களை நடனம் ஆட வைக்கும் அளவிற்கு இருந்தது. 2007ல் வெளியான இந்த திரைப்படம் 300 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. அறிமுகமான முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கொடுத்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார்.

   

 

காதல், ஜாதி என பக்கா கிராமத்து பின்னணியில் படம் வெளியாகி மாஸ் வெற்றி கண்டது. ஆனால் 16 ஆண்டுகளாக இயக்குனர் அமீர் – ஞானவேல் ராஜா இடையே இத்திரைப்படம் தொடர்பாக மிகப்பெரிய பிரச்சனை நடந்து வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது. தற்பொழுது ‘பருத்தி வீரன்’ பட சர்ச்சை விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் என இத்திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் ஒவ்வொருவராக ஆதரவு தெரிவித்து வரும் இந்த வேளையில் தற்பொழுது பிக் பாஸ் சினேகனும் தனது ஆதரவை தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “நான் இயக்குனர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை. பருத்தி வீரன் படத்தை முடிப்பதற்கு அவர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னைப் போன்றவர்களுக்கு தான் தெரியும். ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்.” என்று எரியுற தீயில் எண்ணெய் ஊற்றியுள்ளார். இதோ அவரின் பதிவு…