ஷாக்… உயிரை பணையம் வைத்தால் தான் ஒரு பாட்டில் தண்ணீர்… உலகின் மிக ஆபத்தான “மரணக் கடை” எங்குள்ளது தெரியுமா…?

By Swetha on ஆனி 24, 2026

Spread the love

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ‘ஷினியுஜாய் தேசிய புவியியல் பூங்காவில்’ தரையிலிருந்து சுமார் 393 அடி உயரத்தில், செங்குத்தான ஒரு பாறையின் மீது இந்த விசித்திரமான கடை தொங்கிக் கொண்டிருக்கிறது. வெறும் 2 சதுர மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட இந்த சிறிய மரக் கேபின், உலகின் மிக ஆபத்தான பல்பொருள் அங்காடியாகக் கருதப்படுகிறது. இந்தக் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்க வேண்டுமானால் சாதாரண மனிதர்களால் முடியாது; மலையேற்றக் கருவிகள், கயிறுகள் மற்றும் உலோகக் கம்பிகளின் உதவியோடு செங்குத்தான பாறையில் சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி ஏறித்தான் இதனை அடைய முடியும்.

இங்கு பணிபுரியும் ஊழியர்களின் வாழ்க்கை அன்றாடம் பெரும் சவால்கள் நிறைந்தது. தினசரி சூரிய உதயத்திற்கு முன்பாகவே, மலையேறுபவர்களுக்கான தண்ணீர் பாட்டில்கள் மற்றும் திண்பண்டங்களை கனமான பைகளில் சுமந்துகொண்டு இந்த ஆபத்தான பாறையில் ஊழியர்கள் ஏறுகின்றனர். இந்தச் சிறிய கடையில் கழிப்பறை வசதி ஏதும் இல்லாததால், வேலை நேரத்தில் ஊழியர்கள் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கிறார்கள்; ஏனெனில், இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டுமென்றால் அவர்கள் மீண்டும் 393 அடி கீழே இறங்கிச் சென்றுவிட்டு, மறுபடியும் மேலே ஏறி வர வேண்டும் என்பதால் இந்த வினோத முடிவை அவர்கள் பின்பற்றுகின்றனர்.

   

https://www.instagram.com/p/DZ2VCdsDPYv/?utm_source=ig_web_button_share_sheet

   

இவ்வளவு உயரத்திற்கும் சிரமங்களுக்கும் இடையே கொண்டு செல்லப்பட்டாலும், இங்கு விற்கப்படும் பொருட்களின் விலை மிகவும் சாதாரணமாகவே வைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு தண்ணீர் பாட்டில் வெறும் 2 யுவான் என்ற நியாயமான விலையிலேயே விற்கப்படுகிறது. ஒரே நேரத்தில் ஒரு நபர் மட்டுமே அமரக்கூடிய இந்தத் தனித்துவமான கடை, சில நேரங்களில் ஊழியர்கள் இல்லாதபோது முழுமையாக மக்களின் ‘நம்பிக்கை’ அடிப்படையிலும் இயங்குகிறது. அதுபோன்ற சமயங்களில் மலையேற்ற வீரர்கள் தங்களுக்குத் தேவையான தண்ணீர் அல்லது உணவை எடுத்துக்கொண்டு, அங்குள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து ஆன்லைன் மூலம் பணத்தைச் செலுத்தி விடுகின்றனர்.