வேலை செய்தாலும், சொந்த தொழில் செய்தாலும், அதில் கிடைக்கும் சிறிய தொகையை ஏதேனும் ஒரு சேமிப்பு திட்டத்தில் போட்டு வைத்தல் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். நடுத்தர மக்கள், தங்கள் பணத்தை பெரும்பாலும் தபால் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவார்கள்.
அதில் ஒன்று தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் (POMIS). இதில் நீங்கள் மாதந்தோறும் ரூ.5000 வரை உறுதி செய்யலாம், 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் முதலீட்டுத் தொகை திருப்பி தரப்படும். இந்தக் கணக்கை தொடங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், அருகில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்று, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
இது 7.4% வட்டி வழங்குவதோடு, அதை உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யது தரப்படும். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் 9 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். இதுவே கூட்டுக்கணக்காக இருப்பின், 15 லட்சம் ரூபாய் வரை வரம்பு உள்ளது.
சுமார் 9 லட்சம் டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் 5500 ரூபாய் உங்கள் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். மேலும் கூட்டுக் கணக்கில், 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் 9250 ரூபாய் உங்கள் தபால் கணக்கில் வரவு வைக்கப்படும். இதை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இச்சிறப்பு அம்சம் மிக்க திட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழகச் சட்டமன்றத்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாளை (மே 7) தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
தமிழகத்தில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வை சுமார் 8 லட்சம்…
தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன்வந்துள்ள நிலையில், திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் தனது 'எக்ஸ்' (X)…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திமுக ஆட்சியை இழந்ததோடு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்த செய்தி கேட்டு…
பிரபல முன்னணி ஐடி நிறுவனமான ஐபிஎம் (IBM), தற்போது அசோசியேட் சிஸ்டம் இன்ஜினியர் (Associate System Engineer) பணிக்குத் தகுதியான…