ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இனி கடைசி நேரத்திலும் ‘Boarding Point’-ஐ மாற்றலாம்… ரயில்வேயில் புதிய விதிமுறை அமல்..!!

Spread the love

ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. முன்னதாக, பயணிகள் தாங்கள் ஏறும் நிலையத்தை (Boarding Point) மாற்ற வேண்டுமென்றால், ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. தற்போது இந்த விதியில் பெரும் தளர்வு செய்யப்பட்டு, ரயில் புறப்படுவதற்கு வெறும் 30 நிமிடங்களுக்கு முன்பாக கூட பயணிகள் தங்களின் போர்டிங் பாயிண்டை மாற்றிக்கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடைசி நேரப் பயணத் திட்ட மாற்றங்களால் அவதிப்படும் பயணிகள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்த புதிய நடைமுறை பயணிகளுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கினாலும், ஒரு முக்கிய எச்சரிக்கையையும் ரயில்வே விடுத்துள்ளது. பயணிகள் தங்களின் புதிய ஏறும் நிலையத்திலோ அல்லது மாற்றப்பட்ட போர்டிங் பாயிண்டிலோ ஏறத் தவறினால், அந்த இருக்கை உடனடியாகக் காலியானதாகக் கருதப்படும். அதனைத் தொடர்ந்து, அதே ரயிலில் காத்திருப்போர் பட்டியலில் (Waiting List) உள்ள அடுத்தடுத்த பயணிகளுக்கு அந்த இருக்கை தானாகவே ஒதுக்கப்படும். எனவே, பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்தும் போது தங்களின் பயண நேரத்தைக் சரியாகக் கணக்கிட்டுச் செயல்படுவது அவசியமாகும்.

Soundarya

Recent Posts

அட கொடுமையே… எனக்கு அந்தப் பொண்ணு வேணும்… மாமா வீட்டிற்குச் சென்று… பெண் கேட்ட சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை… சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…

33 minutes ago

கடவுளே… இது என்ன அதிசயம்?… 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை… வியப்பில் மருத்துவர்கள்… இணையத்தை உலுக்கும் வைரல் சம்பவம்…!

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…

33 minutes ago

அதிர்ச்சி..! ஒரே குடும்பத்தில் 4 பேர் கழுத்து நெரித்துக் கொலை… போதை இளைஞர்களின் கொடூர செயல்… போலீஸ் விசாரணையில் அம்பலமான கொடூரம்…!!

வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…

43 minutes ago

16 வயதில் விபரீத முடிவு… பெற்றோரைக் கதறவிட்ட மாணவன்… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்… இளைஞனின் தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…

53 minutes ago

ஐயோ… இது என்ன புதுசா இருக்கு… கல்யாணமே தேவையில்லையா?… டெல்லி ஹைகோர்ட் போட்ட ஒற்றைத் தீர்ப்பு… இணையத்தைக் கலக்கும் நியூஸ்…!!

சட்டத்தின் பார்வையில், நீண்டகாலமாகத் தொடரும் லிவ்-இன் உறவுமுறை என்பது முறைப்படியான திருமணத்திற்கு இணையானதாகவே கருதப்படுகிறது. வயது வந்த இருவர் பரஸ்பர…

55 minutes ago

“பள்ளியையே காணோம்… கண்டுபிடிச்சா ரூ1 லட்சம் ரொக்கம்… அதிரடி சவால் விட்ட எம்.பி சஞ்சய் சிங்… இணையத்தை வைரலாகும் பதிவு… உ . பி – யில் பரபரப்பு…!”

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் இன்னமும் இயங்கி வருவதாகப்…

1 மணத்தியாலம் ago