அமெரிக்கா ஏன் ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து பின்வாங்கியது?… டிரம்ப் கொடுத்த அந்த அதிர்ச்சி அறிக்கை.. ஈரான் போரில் நிகழ்ந்த திடீர் திருப்பம்..!!!

Spread the love

ஈரானின் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட பிறகு, ஈரான் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் எதிர்பார்த்தன. ஆனால், புதிய தலைவராகப் பொறுப்பேற்ற முஜ்தபா காமேனி எடுத்த ஐந்து அதிரடி முடிவுகள் அமெரிக்காவைத் திணறடித்துள்ளன. குறிப்பாக, போரின் ஆறாவது நாளிலேயே ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதன் மூலம் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தினார்.

மேலும், தனது இருப்பிடத்தைக் கண்டறிய முடியாதபடி வீடியோ உரைகளைத் தவிர்த்து எழுத்துப்பூர்வமாக மட்டுமே உத்தரவுகளைப் பிறப்பித்தது, ஈரானிய ராணுவத்தைப் பல சிறு குழுக்களாகப் பிரித்து அமெரிக்காவின் நேரடி ஆக்கிரமிப்பைத் தடுத்தது மற்றும் பிரிட்டனின் சாக்கோஸ் தீவு தளத்தின் மீது தாக்குதல் நடத்தி மேலைநாடுகளை எச்சரித்தது என இவரது வியூகங்கள் போரின் போக்கை மாற்றியுள்ளன.

தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹார்முஸ் விவகாரத்தில் இருந்து பின்வாங்குவதாகவும், ஈரானில் ஆட்சி மாற்றத்திற்குப் பதிலாக போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதே இலக்கு என்றும் கூறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஈரானின் தகவல் தொடர்பு கட்டமைப்பை மிகச்சரியாக ஒருங்கிணைத்த முஜ்தபா, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் பரப்புரைகளை முறியடித்து அதிகாரப்பூர்வ தகவல்களை உடனுக்குடன் வெளியிடுவதன் மூலம் போர்க்களத்தில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் முஜ்தபாவின் இந்தத் தந்திரோபாய முடிவுகள், ஒரு வல்லரசு நாட்டைப் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவழைக்கும் அளவுக்கு ஈரானை வலுப்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதற்கிடையில், அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக உள்நாட்டு விமர்சனங்களும் வலுத்து வருகின்றன.

Rajeshwari

Recent Posts

தோட்டத்தில் வைத்தியம்… விரட்டி விரட்டி மாமூல் கேட்ட போலீஸ்… வீடியோவால் வெடித்த சர்ச்சை… டி.ஐ.ஜி மணிவண்ணன் எடுத்த அதிரடி முடிவு…!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் பாரம்பரிய முறையில் வைத்தியம் பார்த்து வந்த நெடுஞ்செழியன் என்பவர், தன்னிடம் காவல்துறையினர் லஞ்சம் கேட்பதாக…

3 minutes ago

“உல்லாசத்துக்கு வரியா..?” புகைப்படத்தை காட்டி கல்லூரி நண்பன் மிரட்டல்… செல்போனால் வந்த வினை… உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான வாணிஸ்ரீ, பெங்களூருவில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.…

12 minutes ago

“ஓடும் ரயிலில் நாயை இழுத்து செல்ல முயற்சி…” மனிதனின் அலட்சியத்தால் பரிதாபமாகப் பலியான வாயில்லா ஜீவன்…! நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

நபர் ஒருவரின் அலட்சியமான மற்றும் அவசரச் செயலால், நாய் ஒன்று பரிதாபமாகத் தனது உயிரை இழந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில்…

13 minutes ago

“புகார் அளித்தால் அளித்துக் கொள்ளுங்கள்…” இணைப்பு விமானம் ரத்து… 2 நாட்கள் தவித்த பயணிகள்… டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அலட்சியம்…!!

ஸ்ரீநகரிலிருந்து டெல்லி வழியாக மும்பை செல்வதற்காக இணைப்பு விமானத்தில் பயணித்த நபர் ஒருவர், டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின்…

21 minutes ago

பட்டப்பகலில் பயங்கரம்…! நடந்து சென்ற பெண்களிடம் வேலையை காட்டிய வாலிபர்கள்… இணையத்தில் தீயாய் பரவும் சிசிடிவி காட்சிகள்…!!

தெலங்கானா மாநிலம் ஜன்காமா பகுதியில் உள்ள நெசவாளர் காலனியில் இரண்டு பெண்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு சங்கிலி…

50 minutes ago

BREAKING: 5 திமுக MLA-க்கள் ராஜினாமா?….. தவெக விரித்த பனையூர் வலை…. திமுகவை அதிர வைக்கும் ரகசிய ரிப்போர்ட்….!

திமுகவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக மாற்றங்களால் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள்…

55 minutes ago