Categories: சினிமா

BOAT படத்தில் மீண்டும் ஹீரோவாக களமிறங்கிய யோகி பாபு.. கவிழ்ந்தா..? இல்லை கரை சேர்ந்ததா..? திரை விமர்சனம் இதோ..!!

Spread the love

காமெடியனாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் யோகி பாபு. இவர் நகைச்சுவை கதாபாத்திரங்கள் மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். ஏற்கனவே மண்டேலா, பொம்மை நாயகி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இம்சை அரசன் 23- ஆம் புலிகேசி, புலி ஆகிய படங்கள் இயக்கிய சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு போட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. போட் படத்தில் எம்எஸ் பாஸ்கர், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த 1943-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண த்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் கடற்கரை அருகே இருக்கும் முகாமை நோக்கி ஜப்பானிய விமானப்படையினர் குண்டு போட போவதாக தகவல் வருகிறது. இதனால் யோகி பாபு தனது பாட்டியுடன் படகில் ஏறி கடலுக்கு சென்றுவிட்டால் குண்டுவெடிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறார்.

அவருடன் சிலர் படகில் ஏறுகின்றனர். அணுகுண்டை விட ஒரு மனிதனின் சுயநலம் எவ்வளவு கொடூரமானது என்பதை படகு பயணத்தின் போது சொல்வதுதான் படத்தின் மையக்கதை. யோபு பாபு படகோடியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த படத்தில் எம்.எஸ் பாஸ்கர் நூலகராக நடித்துள்ளார். அவரது நடிப்பும் நன்றாக இருக்கிறது. கௌரி கிச்சன் அந்த கானா கர்நாடகா சங்கீதம் பாடலில் ஸ்கோர் செய்து விட்டார். படகில் இருந்த ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளனர்.

அவர்களுக்காக எழுதப்பட்ட வசனங்களும் பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் நீலக்கடலையும், இயற்கை அழகையும் அழகாக படம் பிடித்து காண்பித்துள்ளார். மொத்தமாக படகை சுற்றிய படம் நகர்கிறது. முதல் பாதியில் படம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் கொஞ்சம் டல் அடித்து விடுகிறது. கடைசியில் படகிலிருந்த அவர்கள் என்ன ஆனார்கள் என்ற பரபரப்பையும் கொடுக்கிறது. ஆக மொத்தம் போட் படம் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

#image_title

admin

Recent Posts

“மசோதா எரிப்பு… கறுப்புக்கொடி போராட்டம்”… முதல்வர் ஸ்டாலினின் அதிரடி ஆக்‌ஷன்… அதிர வைக்கும் போஸ்ட்…!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…

5 minutes ago

திமுகவில் வெடித்த குடும்ப சண்டை… உதயநிதிக்கு கயல்விழி கொடுத்த மரண அடி… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…

10 minutes ago

FLASH NEWS: கார் கோர விபத்து… 8 பேர் பலியான சோகம்… கோயிலுக்குப் போன இடத்தில் நேர்ந்த பெரும் சோகம்…!

ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…

17 minutes ago

கண்கலங்க வைக்கும் துயரம்: “டீ குடிக்கச் சென்ற இடத்தில் எமன்..” – சாத்தூரில் 3 பிளஸ்-2 மாணவர்கள் பலியான நெஞ்சை உருக்கும் பின்னணி…!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…

23 minutes ago

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

2 மணத்தியாலங்கள் ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

2 மணத்தியாலங்கள் ago