Categories: சினிமா

பலருக்கும் அள்ளி கொடுக்கும் KPY பாலா… நடக்க முடியாத பெண்மணிக்கு செய்த மிகப்பெரிய விஷயம்.. வைரலாகும் வீடியோ..!

Spread the love

கேபிஒய் பாலா நடக்க முடியாத ஒரு பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்ய பணம் கொடுத்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலமாகவும் மிகப் பிரபலமான காமெடி நடிகராக வளம் வந்தவர் கே பி ஒய் பாலா. இந்த நிகழ்ச்சி மூலமாக தனது திறமையை வெளிக் கொண்டு வந்த இவர் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமையை காட்டினார். அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு அனைவரையும் சிரிக்க வைத்தார்.

அது மட்டுமில்லாமல் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகின்றார். சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தனக்கு கிடைக்கும் பணத்தை வைத்து பலருக்கும் உதவி செய்து வருகின்றார். கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகர்கள் கூட பிறருக்கு உதவி செய்வதற்கு தயங்கி வரும் நிலையில் சிறிய அளவு தொகையை சம்பாதித்தாலும் அதனை மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்து வருகின்றார் கே பி ஒய் பாலா.

நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து மாற்றம் என்ற அறக்கட்டளை மூலமாக பல ஏழை, எளிய குழந்தைகள், உடல் ஊனமுற்றோர் என அனைவருக்கும் உதவி செய்து வருகின்றார். சமீபத்தில் கணவனை இழந்த பெண்மணிக்கு ஆட்டோ வாங்கி கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து வீடு இல்லாத ஒருவருக்கு வீடு கட்டி கொடுத்து அதனை ராகவா லாரன்ஸ் கையால் திறக்க வைத்தார்.

இவரின் வீடியோக்கள் இணையதள பக்கங்களில் படுவைரலாகி வருகின்றது. தனது உதவி செய்யும் குணத்தால் மிகப்பெரிய புகழை எட்டி இருக்கின்றார் கே பி ஒய் பாலா. அந்த வகையில் தற்போது நடக்க முடியாத ஒரு பெண்ணிற்கு அவர் உதவி செய்திருக்கின்றார். ஒரு வருடத்திற்கு முன்பு அந்த பெண்ணால் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது அறுவை சிகிச்சை செய்தால் அவர் நடக்கலாம் என்று கூறியிருந்தார். தற்போது அவர் அறுவை சிகிச்சை செய்து நன்றாக நடந்து வருகின்றார் .மேலும் பிசியோதெரபி செய்ய வேண்டும் என்பதற்காக 45 ஆயிரம் ரூபாய் பணத்தை பாலா அவர்களுக்கு தற்போது கொடுத்திருக்கின்றார். இந்த வீடியோவானது தற்போதைய இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mahalakshmi

Recent Posts

மத்திய கிழக்கு போர் எதிரொலி.. “பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி சாப்பாடுக்கும் தட்டுப்பாடு”… ஸ்தம்பிக்கப் போகும் விவசாயம்… உலக வங்கி நிபுணர் இந்தர்மிட் கில்லின் எச்சரிக்கை…!!!!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…

2 minutes ago

“பிள்ளையைக் கிள்ளி விட்டு.. தொட்டிலை ஆட்டும் ட்ரம்ப்”…. அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த ‘செங்கடல்’ எச்சரிக்கை… அடுத்த சில நாட்களில் நடக்கப்போவது இதுதான்…!

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…

3 minutes ago

வார்த்தை கூறி 180 சிறுமிகளை சீரழித்த காம கொடூரன்… 350 ஆபாச வீடியோக்கள்… ‘ஸ்னாப்சாட்’ சைக்கோ சிக்கியது எப்படி?… மகாராஷ்டிராவை உலுக்கிய கொடூர சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…

8 minutes ago

“30,000 கோடி ஆடியோ விவகாரம்”… ஸ்டாலினுக்கு குஷ்பு விடுத்த பகிரங்க சவால்… திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…

15 minutes ago

சீனா கொடுத்த ‘பிக்பாட்’ ட்விஸ்ட்!… ஜி ஜின்பிங் சொன்ன ‘அந்த ஒரு வார்த்தை’… ஈரானுக்கு டிரம்ப் வைத்த செக்… அதிர்ந்து போன உலக நாடுகள்…!!

பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…

20 minutes ago

மூச்சுத் திணறும் உலகப் பொருளாதாரம்… வெறும் 21 மைல் கடற்பரப்பால் அழியப்போகும் வல்லரசு நாடுகளின் கனவு!… இந்தியாவை நிலைகுலையச் செய்யும் அமெரிக்காவின் இந்த ஒரு முடிவு…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…

23 minutes ago