ரஜினிகாந்த் லதாவை திருமணம் செய்தது இப்படித்தான்… சீக்ரெட்டை பகிர்ந்த ஒய்.ஜி மகேந்திரன்..!

By Soundarya on ஜனவரி 11, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 80 களில் ரஜினிகாந்த் கதாநாயகனாக அசுர வேகத்தில் வளர்ந்து வந்தார். இவர் லதாவை திருமணம் செய்து கொண்டார். தில்லுமுலு சூட்டிங் ஸ்பாட்டில் தான் ரஜினிகாந்த் லதா ரங்காச்சாரியை முதன் முதலாக சந்தித்துள்ளார் . லதாவின் தந்தை பெங்களூரில் பணியாற்றியதால் லதா சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

   

அவர் ஒரு செய்தியாளராக இருந்தால் பத்திரிகைக்காக ரஜினியை பேட்டி எடுக்க சென்றபோதுதான் அவரை முதன்முதலாக சந்தித்துள்ளார். அவரை முதல் தடவை பார்த்ததுமே எனக்கு பிடித்து விட்டது. ஒரு சினிமா நடிகரை சந்தித்தோம் என்ற மாதிரியே இல்லை ஏதோ நீண்ட காலம் பழையவரை சந்தித்தது போல் இருந்தது என்று கூறியிருந்தார் லதா. அந்த பேட்டியின் போதே ரஜினி லதாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள இஷ்டமா ? என்றும் கேட்டு விட்டார்.

   

 

அவர் வெட்கப்பட்டு கொண்டு என்னுடைய பெற்றோரிடம் கேளுங்கள் என்றாராம் லதா. ரஜினி சந்தித்தபோதுதான் அவர் உடல்நல குறைவால் அவதிப்பட்டு தேடி வந்திருக்கிறார். அந்த சந்திப்பிற்கு பிறகு அவர்களுக்கிடையான அன்பு வளர்ந்தது. லதாவின் பெற்றோரை திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள செய்யும் பொறுப்பானது நடிகர் ஒய் ஜி மகேந்திரனின் தலையில் விழுந்துள்ளது . அபூர்வராகங்கள் படத்தில் இருந்து ரஜினிக்கு ஒய்.ஜி மகேந்திரனை தெரியும்.

லதாவின் சகோதரி சுதாவை ஒய்.ஜி மகேந்திரன் தான் திருமணம் செய்து வந்ததால் ரஜினிக்கு பெண் கேட்கும் வேலையும் எளிதாகிவிட்டது. மேலும் சத்யநாராயணாவும், லதாவின் பெற்றோரை சந்தித்து திருமணம் குறித்து பேசி சம்மதம் வாங்கியுள்ளார். அதன்பிறகு தான் திருமணமும் நடந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள பேட்டியில் பேசியல், ஒய்.ஜி மகேந்திரன், லதாவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு முதன் முதலில் என்கிட்ட தான் ரஜினி சொன்னாரு. எனக்கு தெரியவே தெரியாது. திடீர்னு போன் பண்ணி லதாவை திருமணம் செய்யப்போறேன்னு சொன்னதால ஷாக் ஆகிட்டேன். அவங்க first சந்திப்புலேயே திருமணம் செஞ்சிக்கலாமான்னு பேசிக்கிட்டாங்க” என்று கூறியுள்ளார்.