காலில் விழுந்து வணங்கி முத்தமிட்ட மாற்றுத்திறனாளி ரசிகர்.. மேடையில் கண்கலங்கிய படி நின்ற சிவகுமார்.. வெளியான வீடியோ..!

By Nanthini on ஜனவரி 11, 2025

Spread the love

சிவக்குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த நடிகர் ஆவார். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த இவரது இயற்பெயர் பழனிசாமி என்பதாகும். இவர்  தமிழ் சினிமாவின்  முன்னணி  நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையாவார். 1965 ஆம் ஆண்டு “காக்கும் கரங்கள்” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் சிவக்குமார். தொடர்ந்து சரஸ்வதி சபதம் கந்தன் கருணை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். “கந்தன் கருணை” திரைப்படத்தில் இவர் முருகன் கதாபாத்திரம் என்று நடித்திருந்தார். முருகனின் வேடம் அப்படியே சிவகுமாருக்கு கச்சிதமாக பொருந்தியது. அனைவரும்   இவரை முருகனாக ரசித்தனர். தொடர்ந்து பல பக்தி படங்களில் நடித்தார் சிவக்குமார். திருமால் பெருமை காரைக்கால்  அம்மையார்  போன்ற  இவர்  நடித்த   படங்கள்  வெற்றி பெற்றது.

நடிகர் சிவகுமார் சினிமாவை விட்டு விலக அந்த நடிகை தான் காரணமா? வெளியான பரபரப்பு தகவல்..!

   

மேலும் ரோசாப்பூ ரவிக்கைக்காரி, ஆட்டுக்கார அலமேலுஇன்று நீ நாளை நான், சிந்து பைரவி, அக்னி சாட்சி, வெள்ளிக்கிழமை விரதம் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார் சிவக்குமார். சிவாக்குமார் தனது சினிமா வாழ்க்கையில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன், ஆர் முத்துராமன், ஏவிஎம் ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், மோகன், அர்ஜுன், அஜித்குமார், விஜய், விக்ரம், சூர்யா போன்ற அனைத்து நடிகர்களுடன் நடித்திருக்கிறார். இது மட்டுமில்லாமல் ராதிகாவுடன் இணைந்து சித்தி அண்ணாமலை போன்ற பிரபல தொலைக்காட்சி தொடர்களிலும் தோன்றியிருக்கிறார்.

   

என் மனைவி மடியில்தான் உயிர் விடனும் - நடிகர் சிவக்குமார் உருக்கம்! - தமிழ்நாடு

 

இப்படி சினிமாவில் அனைவரும் போற்றும் வகையில் இருக்கும் சிவக்குமார் சேலத்தில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது மேடைக்கு வந்த மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் உணர்ச்சி பொங்க பேசி சிவகுமாரின் காலில் விழுந்து வணங்கி முத்தமிட்டார். அவரை வாரி அணைத்த சிவகுமார் ஆர தழுவி கன்னத்தில் முத்தமிட்டு உணர்ச்சிவசப்பட்டார். சிவகுமாரின் புகழ் உலகம் அழியும் வரையும் இருக்கும், அவரைப் பற்றி அணு அணுவாக எனக்கு தெரியும், இப்படி ஒரு மனுஷனை பெற்றதற்கு அவங்க அம்மா புண்ணியவதி பாக்கியம் செஞ்சிருக்கணும் இன்று மாற்றுத்திறனாளி ரசிகர் உணர்ச்சிவசப்பட்டு பேசியதை கண்டு மேடையில் கண்கலங்கியபடி சிவகுமார் நின்று கொண்டிருந்தார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Polimer News (@polimernews)