இப்படி ஒரு Attitude ஆன Celebtity ஐ பார்த்ததே இல்லை… நயன்தாராவை வசை பாடிய Influencer…

By Meena on ஜனவரி 11, 2025

Spread the love

நயன்தாரா தென்னிந்தி சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகை ஆவார். இவரது இயற்பெயர் டயானா மரியம் குரியன் என்பதாகும். ந்த ஒரு சினிமா பின்புமே இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த நயன்தாரா தனக்கென தனி இடத்தை சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார் நயன்தாரா. அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

   

2003 ஆம் ஆண்டு மலையாள மொழி திரைப்படத்தில் அறிமுகமான நயன்தாரா 2005 ஆம் ஆண்டு “ஐயா” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதே வருடத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக “சந்திரமுகி” படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து கஜினி, வல்லவன், யாரடி நீ மோகினி, சத்யம், வில்லு, பாஸ் என்கிற பாஸ்கரன், பில்லா என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

   

அதற்குப் பிறகு ஹீரோவே இல்லாத ஹீரோயின் கதையம்சம் கொண்ட படங்கள் ஆன கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், நெற்றிக்கண் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார் நயன்தாரா. இவரது எதார்த்தமான நடிப்பை பார்த்த மக்கள் இவரை “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அழைக்கின்றனர்.

 

நயன்தாரா நடிப்பையும் தாண்டி பல பிசினஸ்களில் முதலீடு செய்து வருகிறார். Femi 9, The Lip Balm Company, 9 Skin போன்ற பல நிறுவனங்களில் இவரது முதலீடு இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவரது Femi 9 நாப்கின் பிராண்ட் இன் நிகழ்ச்சி சமீபத்தில் மதுரையில் நடைபெற்றது. இதில் பல Influencer களும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு Influencer நயன்தாராவை வசைப்பாடி இருக்கிறார்.

அவர் கூறியது என்னவென்றால் Femi 9 பிராண்டின் நிகழ்ச்சி காலையில் ஆரம்பித்து மதியம் முடிந்துவிடும் என்று சொன்னார்கள். ஒரு செலிப்ரிட்டி என்றால் லேட்டாக வரலாம் ஆனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆறு மணி நேரம் கழித்து லேட்டாக வந்தார்கள். மதியமே முடிய வேண்டிய நிகழ்ச்சியை மாலை 6 மணிக்கு தான் முடித்தார்கள். இதனால் பலர் டிரெயின் மட்டும் பஸ்களை மிஸ் செய்து விட்டனர்.

அதுமட்டுமல்லாமல் தனியாக Influencerகளுக்கு என ப கண்டிஷன் போட்டு மீட்டப் வைத்தார்கள். அதில் ரொம்ப Attitude ஆக விக்னேஷ் சிவன் உங்களுக்கு என்ன போட்டோ தான எடுக்கணும் எடுத்துக்கோங்க அப்படின்னு பேசினார். நயன்தாராவும் மிகுந்த Attitude உடன் நடந்துக் கொண்டார். இதுபோல Attitude நிறைந்த செலிப்ரட்டியை நான் பார்த்ததே இல்லை என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் வசைப்பாடி இருக்கிறார் அந்த Influencer.