எதிர்பாராததை எதிர்பாருங்கள்..!. இந்த வாரம் வெளியேறப்போகும் 2 போட்டியாளர்கள்… கடும் அதிருப்தியில் இணையவாசிகள்..!

By Soundarya on ஜனவரி 11, 2025

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதற்கு முந்தைய சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். மொத்தம் 24 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 8 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

   

இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்ற நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் பவித்ரா, தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரயான், சௌந்தர்யா இருந்த நிலையில் கடந்த வாரம் மஞ்சரி மற்றும் ராணவ் ஆகியோர் வெளியேறினர். இந்த வாரத்தின் ஆரம்பமே அட்டகாசமாக இருந்தது.  வீட்டை விட்டு வெளியேறி போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்தார்கள்.

   

 

அவர்களுடைய ஆட்டம் வெறித்தனமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் எதையுமே மாற்றவில்லை. இந்த நிலையில் இந்த வாரம் டபுள் எலிமினேஷனில் முதல் நபராக அருண் வெளியேறியுள்ளார் . அதனை அடுத்து யாரும் எதிர்பாராத விதமாக தீபக் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வலுவான போட்டியாளர்களில் முக்கியமானவர் தீபக் என ரசிகர்களால் கூறப்பட்டு வந்த நிலையில் கண்டிப்பாக இவர் பைனலில் இருப்பார் என்று கூறினார்கள். இந்த நிலையில் தீபக் கிளைமேட் ஆகியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் தீபக் வெளியேற்றியது எதிர்பாராத எவிக்ஷன் என்று ரசிகர்கள் தங்களுடைய எதிர்ப்பை சமூக வலைதளங்களை தெரிவித்து வருகிறார்கள் .